Skip to main content

பெண் கேட்டு பிரம்மாண்ட விளம்பரப் பலகை வைத்த 66 வயது முதியவர்... குவியும் மணமகள்கள்!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

 

banar

 

அமெரிக்காவில் திருமணத்துக்குப் பெண் வேண்டி முதியவர் ஒருவர் செய்துள்ள பிரம்மாண்ட விளம்பரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்காவைச்  சேர்ந்தவர் ஜிம் பேஸ். 66 வயதைத் தொட்ட இவர் உடற்பயிற்சி ஆர்வலர். தினமும் உடற்பயிற்சிக்காக குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிப்பவர். இரண்டு முறை திருமணமான அவர் இருவரையும் விவகாரத்து செய்துள்ளார். இந்நிலையில் கிருஸ்துமஸ் பண்டிகை வர உள்ளதை ஒட்டி தான் மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியுள்ளது. இதனை அடுத்து 5 குழந்தைகளுக்குத் தந்தையான அவர் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் "நல்ல பெண் தேவை" என்று பிரம்மாண்ட விளம்பரப் பலகையை அவர் அமைத்துள்ளார். அதில் அவருடைய தொலைபேசி எண்ணும், அவருடைய புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் 50-55 வயது உடைய பெண்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே நான்கு நாட்களாக பலர் அவரை திருமணத்துக்கு அப்ரோச் செய்வதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்