Published on 08/01/2020 | Edited on 10/01/2020
சாதனைகளை செய்வதில் சீனாவிற்கு இணையான நாடு வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு தொழிற்நுட்ப ரீதியாக பல்வேறு சாதனைகளை ஒவ்வொரு நாளும் படைத்து வருகின்றது. அந்த வகையில் 5 மாடி கட்டடம் ஒன்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி சென்று நிலை நிறுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சாண்டோங் மாகாணத்தில் சீன அரசு சாலையை விரிவுப்படுத்த விரும்பியது. இந்த பணிக்கு அங்கிருந்த ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடைஞ்சலாக இருக்கவே, அதனை அதிநவீன இயந்தரங்களின் உதவியுடன் 24 மீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்லப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அந்த கட்டடம் 8 ஆயிரம் டன் எடை கொண்டது. இருந்தாலும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த பணியை நிறைவேற்றினர்.