Skip to main content

ஏமன் தாக்குதல் 29 குழந்தைகள் உயிரிழப்பு!!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018

 

 

attack

 

 

 

ஏமனில் வடமேற்கு பகுதியில் ஹவுதிக் புரட்சியாளர்கள் மீது நடைபெற்ற விமான தாக்குதலில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த  29 குழந்தைகள் இறந்துள்ளனர்.

 

ஏமன் அரசிற்கு எதிராக  ஈரானின் ஆதரவுடன் ஹவுதிக் என்ற புரட்சிபடை பல தாக்குதல் சம்பவங்கள் நடத்தி அதன் மூலம் ஏமனின் சனா போன்ற இடங்களை கைப்பற்றி வைத்துள்ளது.

 

அதேபோல் ஹவுதிக் படையை அகற்ற சர்வதேச நாடுகளிடம் ஆதரவுபெற்ற ஏமன் அரசுக்கு சவூதி அரேபியா கூட்டுப்படையும் ஆதரவளித்து வருகிறது. இதனால் நடதப்படும் விமான தாக்குதல்களில் பொதுமக்களும் இறந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று ஏமனின் வடமேற்கு பகுதில் சடா என்ற இடத்தில் ஹவுதிக் அமைப்பு மீது  நடந்தப்பட்ட விமான தாக்குதலில் பேருந்தில் பயணித்த 12 அப்பாவி குழந்தைகள் இறந்துள்ளனர் என்ற செய்தி ஊடங்களில் வெளியானது. ஆனால் தற்போது பேருந்தில் பயணித்த 29 குழந்தைகளும் இறந்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்