Skip to main content

திருச்சியில் பரபரப்பு; மனைவியைப் பிரிந்த கணவர் எடுத்த விபரீத முடிவு!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Youth lost their life in Trichy

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சையது முஸ்தபா. இவரது மகன் ஷேக் பார்த்தி (வயது 35). மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துவந்துள்ளது.

இதனிடையே ஷேக் பார்த்தி  மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஷேக் பார்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது சகோதரர் நாகூர் கனி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஷேக் பார்த்தி உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்