Skip to main content

"பெரியாரை விலக்கிவிட்டு தமிழ்த் தேசியம் பேசுவது பருப்பு இல்லாமல் சாம்பார் வைப்பது!" - எழுத்தாளர் அருணன்

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

n

 

பெரியார் தொடர்பாக அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான அருணன் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்ட ஒரு கருத்து தற்போது வைரலாகிவருகிறது. நாம் நினைப்பது மிக எளிதில் பொதுவெளியில் தெரிவிக்க சமூக ஊடகங்கள் இன்றைக்கு மிகவும் உதவியாக இருந்துவருகிறது. அதே வேளையில் சிலர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து சமூகத்தில் விஷத்தை விதைக்கவும் முயற்சிக்கிறார்கள். பெரியார் தொடர்பாக கடந்த பத்து நாட்களாக, குறிப்பாக அவரது பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டதில் இருந்து பலரும் பெரியார் மீது வன்மம் கொண்டு கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

 

குறிப்பாக, நாட்டிற்காக போராடிய தலைவர்கள் பலரும் இருக்கையில், பெரியார் பிறந்த தினத்தை மட்டும் ஏன் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும், பெரியாரை பெருமைப்படுத்தும் முயற்சியில் மற்றவர்களை அரசு சிறுமைப்படுத்துவதாகவும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், பெரியார் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த அரசியல் தலைவரும், எழுத்தாளருமான பேராசிரியர் அருணன், "பெரியாரை விலக்கிவிட்டு தமிழ்த் தேசியம் பேசுவது பருப்பு இல்லாமல் சாம்பார் வைப்பது" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்