Skip to main content

நடந்ததை நான் கூறி இருந்தால்..."முகேனுக்கு பிக்பாஸ் டைட்டிலே கிடைத்திருக்காது" மீரா மிதுன் மீண்டும் சர்ச்சை!

Published on 15/10/2019 | Edited on 16/10/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றார். அதோடு டைட்டில் வின்னர் பெற்ற முகேனுக்கு 50 இலட்சம் பரிசும் கிடைத்தது. இந்த நிலையில் மீரா மிதுன் தினமும் சர்ச்சை வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். தற்போது முகேன் குறித்து ஒரு பதிவினை மீரா வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த வீடியோவை தான் வெளியிடவில்லை என மீரா கூறியிருக்கின்றார். 


 

big boss

 


அந்த வீடியோ பதிவில்,  "எனக்கும் முகேனுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை நான் கூறி இருந்தால், முகேனுக்கு பிக்பாஸ் டைட்டிலே கிடைத்திருக்காது" என குறிப்பிட்டிருந்தார். மீரா மிதுன் இப்படி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் சேரனை பற்றி கருத்து கூறி சர்ச்சையில் சிக்கினார். அதே போல் தமிழ்நாட்டில் சிலர் என்னை இழிவாகப் பேசித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், சிலர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த 4 ஆண்களும் இணைந்திருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த நால்வருமே என் பின்னால் தான் வீட்டிற்குள் சுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தில் கிடையாது என்று பேசியது சர்ச்சை கிளப்பியது. 

 

 

சார்ந்த செய்திகள்