Skip to main content

‘நான் எதுக்கு கரோனா டெஸ்ட் எடுக்கணும்’ - விமான நிலையத்தில் சலம்பிய பயணி!!

Published on 20/05/2021 | Edited on 20/05/2021
Why Should I Take the Corona Test - Passenger at the airport !!

 

வெளிநாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த விமானத்தில் பயணித்த பயணிகளை கரோனா பரிசோதனை செய்தனர்.

 

அதில் திருச்சியை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் ‘என்னை எதற்கு சோதனை செய்கிறீர்கள், நான் எதற்கு பரிசோதனை செய்ய வேண்டுமென்று’ மதுபோதையில் விமான நிலையத்திற்குள் சலம்பியுள்ளார். மேலும் பரிசோதனைக்கான ஆயிரத்து 200 ரூபாய் வழங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் அவரை விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் அவரை அழைத்துச் செல்வதற்காக வந்த அவருடைய மனைவியோடு அந்த பயணியை அனுப்பி வைத்துள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்