Skip to main content

எந்த வழியில் கல்லூரி தேர்வுகள்?-உயர்கல்வித்துறை தகவல்!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Which way are college exams? -Higher Education Information!

 

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜன.30ஆம் தேதி முழு முடக்கம் ரத்து செய்யப்படுகிறது என அரசு அறிவித்திருந்தது. நாளை முதல் (ஜன.28 ஆம் தேதி) இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் நேரடியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என்ற குழப்பம் இருந்தது. இந்நிலையில் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தளங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்