Skip to main content

டாஸ்மாக் கடைகளை 2 மணிக்கு திறந்தால் என்ன?- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் டாஸ்மாக் தொடர்பான வழக்குகளின் விசாரணையில் ஏற்கனவே டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையில் சட்டவிரோதமாக நடத்தப்படும் பார்கள் மற்றும் மதுபான கடைகள் தொடர்பாக நடத்திய திடீர் சோதனையில் இதுவரை 100  வழக்குகளும் இது தொடர்பாக 81 பேர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. 

 

tasmak

 

அந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள் டாஸ்மாக்கில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கான சோதனை முறைகள் சரியானதாக இல்லை தெரிவித்தனர்.

 

இதனால் மது விற்பனை நேரத்தை குறைப்பதென்பது அவசியமாகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் டாஸ்மாக் கடைகளை ஏன் 12 மணிக்கு திறக்கவேண்டும் உணவு இடைவேளைக்கு பிறகு 2 மணிக்கு ஏன் திறக்கக்கூடாது? மேலும் 21 வயதிற்கும் குறைவான வயதுடைவர்களுக்கு மதுவிற்பனை கூடாது என அரசு டாஸ்மாக் நிர்வாகத்திடம் அறியுறுத்தியுள்ளதா? அப்படியானால் மதுவிற்பனையில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் மீது இதுவரை அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இதுவரை எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது   என தமிழக அரசிடமும் டாஸ்மாக் நிர்வாகத்திடமும் சரமாரியாக கேள்விகளை நீதிபதிகள் வைத்தனர்.

 

மேலும் இந்த கேள்விகளுக்கு தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை ஜூன் 11 தேதிக்கு தள்ளிவைத்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்