Skip to main content

''நீங்கள் திறந்து வைப்பதுதான் எங்களுக்கு பெருமை''-துரை வைகோ  நெகிழ்ச்சி (படங்கள்)

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவிற்கென தனி அறை இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மூத்த அரசியல்வாதியும், சுதந்திர போராட்ட தியாகியுமான நல்லகண்ணு அய்யா கலந்துகொண்டு அறையைத் திறந்து வைத்தார்.

 

இந்த நிகழ்வில் அறையை திறந்து வைத்த பிறகு பேசிய தோழர் நல்லகண்ணு, 'நாம் பயணிப்பது வெவ்வேறு இயக்கங்கள் என்றாலும் அறையைத் திறக்க என்னை கூப்பிட்டதற்கு நன்றி' என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய துரை வைகோ, 'அய்யா நான் சிறிய வயதில் இருந்து உங்களை பார்க்கிறேன். நீங்கள் மூத்த அரசியல்வாதி, சுதந்திரப் போராட்ட தியாகி உங்களை கூப்பிட்டு இந்த நிகழ்வை நடத்துவதும், அதில் நீங்கள் கலந்து கொள்வதும் எங்களுக்குத்தான் பெருமை. எனது தந்தையும் இந்த செயலை விரும்புவார்' எனத் தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்