Skip to main content

“ஜெயலலிதா மாதிரி நாங்க இல்ல! மத்தியில் பத்து அமைச்சர்கள் கேட்போம்!” - அமைச்சரின் பா.ஜ.க. அட்டாக்!

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
rajendra


பாராளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, மற்றும் நிபந்தனைகள் குறித்து அதிமுக தலைமை மட்டுமே பேசிவந்த காலம் மலையேறிவிட்டது. அதேநேரத்தில், டெல்லி அரசியல் குறித்து இஷ்டத்துக்குப் பேசும் தைரியம் அதிமுக அமைச்சர்களுக்கு வந்திருக்கிறது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்டம் – காரியாபட்டியில் நடந்த ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை மனதில் நிறுத்தி, வெளுத்து வாங்கிவிட்டார்.

“இப்ப எங்களோட லட்சியம் என்ன தெரியுமா? டெல்லிதான்! டெல்லில அதிமுக ஆதரவு கொடுத்த கட்சிதான், இனிமேல் ஆட்சியமைக்க முடியும். அதிமுக ஆதரவு இல்லாம, டெல்லில யாரும் ஆட்சியமைக்க முடியாது. இனி அதிமுக இப்படியெல்லாம் வெற்று ஆதரவு கொடுக்காது. மத்தியில் பத்து மந்திரி கொடுன்னு கேட்போம். சும்மா வெற்று ஆதரவு ஜெயலலிதா கொடுத்தாங்கன்னா, அவங்க வந்து பெரிய மனுஷத்தன்மையில கொடுத்தாங்க. நம்மள்லாம் அப்படி கொடுக்க முடியாது. பத்து மந்திரி கொடு. நான் வந்து விருதுநகர் மாவட்டத்துக்கு ஒரு மந்திரி கொடுன்னு கட்டாயம் கேட்பேன். நம்ம யாருக்கோ ஒட்டு போட்டு, யாருக்கோ ஆதரவு கொடுத்து, இவங்க கேட்பாங்க. கேட்கிறவங்களுக்கு நாம ஓட்டு போடணும். நீ இங்கிட்டு ஒரு காலை வைப்ப. அங்கிட்டு ஒரு காலை வைப்ப. ஒரே பேச்சு. நீ எங்கள நம்பு. உனக்கு ஆதரவு கொடுக்கிறோம். இல்ல, அவன நம்பு. முன் வாசல்ல அவன பார்க்கிற. பின் வாசல்ல எங்கள பார்க்கிற. இந்த வேலைய எல்லாம் எங்ககிட்ட வைக்காத.” என்றார் அதிரடியாக.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் தூண்டுதலில்தான் கே.டி.ராஜேந்திரபாலாஜி இப்படி பேசுகிறாரா? அந்தக் கட்சிக்கே வெளிச்சம்!

 

சார்ந்த செய்திகள்