Skip to main content

இன்று கூடுகிறது கிராம சபை... முதல்வர் பங்கேற்பு!

Published on 24/04/2022 | Edited on 24/04/2022

 

mk

 

இன்று (ஏப்.24) 'பஞ்சாயத்துராஜ் தினம்' கடைபிடிக்கப்படுவதை ஒட்டி 'நீடித்த வளர்ச்சி இலக்குகள்' குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு ஏற்கனவே  தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாத நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதியான இன்று நடைபெற இருக்கிறது.  

 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காட்டில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்று ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப்பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிய இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்