Skip to main content

விஜயகாந்த் சுதீஷ் ஆலோசனை!

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

நேற்று மூன்று மணி நேரமாக நடந்த அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்தை முடிவு எட்டப்படாமல் இழுபறியில் முடிவுற்ற நிலையில் தற்போது கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

 Vijayakanth Sudheesh Advised!

 

நேற்று சென்னை விமானநிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்- அமைச்சர் வேலுமணியுடன் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்  திடீர் ஆலோசனை நடத்தினர். ஆனால் அந்த ஆலோசனையின் போது தேமுதிக நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி பேச வைத்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.எனவே  அதிமுக தேமுதிக கூட்டணி அறிவிக்கப்படாத நிலையில் விஜயகாந்த் புகைப்படம் மற்றும் கொடிகள் மோடி பொதுக்கூட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. 

 

 Vijayakanth Sudheesh Advised!

 

திமுகவும் தேமுதிக கேட்கும் அளவிலான தொகுதிகளை இப்போது ஒதுக்கமுடியாது. நேற்றே கூட்டணி இறுதிவடிவம் பெற்றது என கைவிரித்த நிலையில்,

 

 அதனையடுத்து நேற்று மீனம்பாக்கம் தனியார் நட்சத்திர  ஓட்டலில் இரவு 7.30 மணியளவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை மீண்டும் சந்தித்தார்  தேமுதிக துணைப்பொதுச்செயலார் சுதீஷ்.

 

 Vijayakanth Sudheesh Advised!

 

 அதிமுக கூட்டணி குறித்து மூன்று மணி நேரமாக நடைபெற்ற  அந்த பேச்சுவார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சுதீஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவர்களுடன் தேமுதிக முக்கிய நிர்வாகிகளான பார்த்தசாரதி, இளங்கோவன், அழகாபுரம் மனோஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்