Skip to main content

வெங்கையா நாயுடுவை சந்திக்கிறார் செங்கோட்டையன்

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
வெங்கையா நாயுடுவை சந்திக்கிறார் செங்கோட்டையன்

பா.ஜ.க.வின் அவசர அழைப்பை ஏற்று 31ந் தேதி அதிகாலை சென்னையிலிருந்து டெல்லி சென்ற மூத்த அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இன்று காலை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்தார். தொடர்ந்து மாலையில் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவை சந்திக்க சொல்லி பா.ஜ.க. மேலிடம் கூறியுள்ளதாம்.

அதன்படி தற்போது வெங்கைய்யா நாயுடுவை சந்திக்க துனை ஜனாதிபதி அலுவலகம் விரைந்துள்ளார் செங்கோட்டையன். துணை ஜனாதிபதியுடன் செங்கோட்டையன் அ.தி.மு.க. அரசு கலையாமல் இருப்பது சம்பந்தமாகவும் டி.டி.வி.தினகரன் அணியை எப்படி எதிர்கொள்வது அதற்கு என்னென்ன திட்டங்கள் எடப்பாடி அரசிடம் உள்ளது என விளக்கவுள்ளார். 

நேற்று எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம், மற்றும் சி.பி.ஐ. எம்.பி.க்கள் மெஜாரிட்டி இல்லாத அ.தி.மு.க. அரசு மீது தமிழக கவர்னர் சட்டப்படி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஜனாதிபதி உத்தரவிட வேண்டும் என ஜனாதிபதி கோவிந்தை நேரில் சந்தித்து மனு கொடுத்த நிலையில் செங்கோட்டையன் துணை ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.  

-ஜீவாதங்கவேல்

சார்ந்த செய்திகள்