Skip to main content

காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை.

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

வேலூர் வணிகவியல் குற்ற புலனாய்வு துறை ஆய்வாளராக இருப்பவர் ரமேஷ் ராஜ். வேலூரில் உள்ள இவரது வீட்டிற்க்குள் ஜூலை 6 ஆம் தேதி நுழைந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு வேலூர் மாநகரத்தில் இடையன் சாத்து மண்டபம் சாலையில் ஒரு வீடு மற்றும் ஊசூர் தெல்லூர்பாளையத்தில் உள்ள வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பணியில் இருக்கும் போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என கடந்த 28.06.2019 ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் ராஜ் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

 

 

vellore police inspector home raid in corruption department take charge

 

 

இவரிடம் வரும் வழக்குகளில் யார் வசதியானவர்களோ, அவர்களுக்கு தகுந்தார் போல் வழக்கை விசாரிக்க கணிசமாக பணத்தை வாங்குவதை பலரும் புகாராக தெரிவித்துள்ளனர். அதோடு, இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர். அதனை ரகசியமாக விசாரித்த காவல் துறையினர், அது உண்மை என தெரிய வர அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, தற்போது சட்டப்படி அவரது வீட்டில் சோதனை நடத்தி வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்