Skip to main content

இரவு நேரங்களில் எரிக்கப்படும் வாகனங்கள்... அச்சத்தில் மக்கள்...!!!

Published on 13/09/2018 | Edited on 13/09/2018

 

அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் இரவு நேரங்களில் தொடர்ந்து வாகனங்கள் எரிக்கப்படுவதால் அச்சமடைந்த பொது மக்கள் இனம்புரியாத கலக்கத்துடன் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.

 

ராமநாதபுர மாவட்டம் திருவாடனை தாலுகாவிற்குபட்டது நம்புதாழை எனும் மீனவக் கிராமம். இங்குநேற்றிரவு சாதிக் அலி, அலி ஆகியோரது இரண்டு இரு சக்கர வாகனங்கள் மர்மமான முறையில் எரிக்கப்பட்டன. இது போல், சமீபத்தில் ஒரு ஆட்டோ மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களும் எரிக்கப்பட்டது. இதை செய்வது தனி மனிதனா..? இல்லை குழுக்களா..? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் எதற்கா இதை செய்கிறார்கள்..? அந்த மர்ம மனிதர்கள் யார்..? என்ற பதைப்பதைப்பும் மக்களிடையே உள்ளது. எனினும், காரணம் எதுவாக இருந்தாலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையையும் வைத்தனர் அவர்கள். அதே வேளையில், போலீஸாருக்கு உதவியாக வீட்டிற்கு இருவர் காவல் ரோந்து செல்வது என முடிவு செய்துள்ளனர் அவ்வூர் மக்கள்.

சார்ந்த செய்திகள்