Skip to main content

ஊராட்சி தலைவர் அவமதிப்பு மற்றும் உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சிதம்பரத்தில் வி.சி.க. ஆர்ப்பாட்டம்...

Published on 12/10/2020 | Edited on 12/10/2020
vck struggle in cuddalore

 

 

சிதம்பரம் காந்தி சிலை அருகில் கடலூர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் தெற்குதிட்டை ஊராட்சி பட்டியலின பெண் தலைவரை தரையில் அமர வைத்து, தேசியக்கொடியை ஏற்ற விடாமல் தடுத்த சம்பவத்தை கண்டித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பாலா, அறவாழி தலைமை தாங்கினார். இதில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் தெற்கு திட்டை சம்பவத்தை கண்டித்தும், உத்தரப் பிரதேச மாநில சம்பவத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன இதனை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்