Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்த நடிகை கோர்ட்டில் ஆஜர்

Published on 21/06/2018 | Edited on 21/06/2018

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி நிலா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். படப்பிடிப்பில் இருந்தபோது போலீஸ் உடையிலேயே அவர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து பேசியதோடு, காக்கிச் சட்டையை அணியவே வெட்கப்படுவதாகவும் கூறியிருந்தார். 

 

 

 

இந்த வீடியோ வாட்ஸ்அப்புகளில் வைரலாக பரவியது. அவர் மீது சென்னை வடபழனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இன்று அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

 

 

வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், நிலானி நிலாவுக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டது. 
 

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்