Skip to main content

காதலுக்கு எதிர்ப்பு; விபரீத முடிவெடுத்த சகோதரிகள்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

trichy valanadu daughter and father incident

 

திருச்சி மாவட்டம், வளநாட்டை சேர்ந்தவர் பிச்சை (வயது 65). கொத்தனாரான இவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள். இதில் வித்யா, காயத்ரி ஆகிய 2 பேரும் காங்கேயத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அப்போது அவர்கள் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

 

மகள்களின் காதல் விவகாரம் குறித்த தகவல் அறிந்த பிச்சை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மனமுடைந்த சகோதரிகள் இருவரும் இன்று (06.06.2023) வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகோதரிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சகோதரிகள் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்