Skip to main content

புகையிலைப் பொருட்கள் விற்பனை; கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

trichy uraiyur shop food safety officers action taken

 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைத் தொடர்ந்து விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

 

திருச்சி மாவட்டம்  உறையூரில் செயல்பட்டு வரும் ஐந்து கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதை அறிந்து முதல் முறையாக ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து ஐந்து கடைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடந்த 10 ஆம் தேதி அவசரத் தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் R.லால்வேனா கடந்த 22 ஆம் தேதி அவசரத் தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் ஐந்து வணிக கடைகளுக்கும் நேற்று (24.05.2023) சீல் வைக்கப்பட்டது.

 

trichy uraiyur shop food safety officers action taken

மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்புத் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கடைகள் சீல் செய்யப்படும்" என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர். பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தாங்கள் உணவுப் பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் இது குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்