திருச்சி அதிமுகவில் அதிக வருடங்கள் மாவட்ட செயலாளராக நீடித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீரங்கம் மனோகர். இவர் கவுன்சிலர், கோட்டத்தலைவர், எம்.எல்.ஏ, அரசு கொறடா என பல்வேறு பதவிகளில் வகித்து வந்தார். ஸ்ரீரங்கம் பகுதியில் திருமண மண்டபம், பெட்ரோல் பங்கு, தியேட்டர் என பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார்.
ஜெ. மறைவுக்கு பிறகு தினகரன் அணியோடு கைகோர்த்து மாநில அமைப்பு செயலாளர் பொறுப்பை பெற்றார். கூடுதலாக வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பையும் பெற்றார். இந்த நிலையில் அமமுகவை விட்டு வெளியேற போகிறார்... உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி அதிமுகவில் பேசிவிட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில் மனோகரனின் மகன் திருமணம் செப்டம்பர் 1ம் தேதி டிடிவி தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த திருமணமத்திற்கு திருமண மண்டபம், தியேட்டர் என எல்லா இடங்களிலும் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது.
ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் இரண்டு புறமும் புத்தம் புதிய கொடிகள் கட்டியிருக்கிறார்கள். இதே போன்று ஸ்ரீரங்கம் மனோகர் குடியிருக்கும் பர்மாகாலனி விதீயில் நேற்று திடீர் என புத்தம் புதிய சாலை ஸ்ரீரங்கம் மாநகராட்சியின் சார்பில் போடப்பட்டுள்ளது கட்சியினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும்கட்சியான அதிமுக, அமமுகவில் உள்ள அனைவரையும் தன் கட்சிக்கு இழுத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் மனோகர் தன் மகன் திருமணம் மற்றும் மருமகளுக்காக தன் வீதி சாலையில் மாநகராட்சியின் உதவியுடன் புதுப்பித்துள்ளார். எதிர் கட்சியாக இருந்தாலும் எங்க அண்ணன் செல்வாக்குடன் தான் உள்ளார் என்று பெருமை பொங்க சொல்கிறார்கள் ஸ்ரீரங்கம் அமமுக தொண்டர்கள்.