Skip to main content

“காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது” - போக்குவரத்துத்துறை அதிரடி!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Transport Dept says police cant travel in buses without paying

காவலர்கள் கட்டணமின்றி அரசுப் பேருந்தில் பயணிக்க முடியாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி என்பவர் பயணம் மேற்கொண்டார். அப்போது பேருந்தின் நடத்துநர் காவலர் ஆறுமுகப்பாண்டியிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியுள்ளார். அதற்கு ஆறுமுகப்பாண்டி, ‘காவலர் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது’ என கூறி நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. அதே சமயம் உரிய வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்குநேரி காவலர் ஆறுமுகப்பாண்டி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்