Skip to main content

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு- மேலும் 6 பேர் கைது!

Published on 11/10/2020 | Edited on 11/10/2020

 

tnpsc exam cbcid investigation 6 persons arrested

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 6 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கைது  செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உட்பட 6 பேர் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

 

இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் என இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு கிடப்பில் கிடந்ததாகப் புகார் எழுந்ததால் 15 நாட்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. வட்டார தகவல் கூறுகின்றன.

 

இதனிடையே, ராமநாதபுரத்தில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சிப் பெற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்ட மாலாதேவி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

 

சார்ந்த செய்திகள்