Published on 08/07/2020 | Edited on 08/07/2020
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு www.tnpowerfinance.com என்ற புதிய இணையத்தளமும், 'TNPFCL' என்ற புதிய செயலியையும் முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்தினார். மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திலுள்ள 8,000 பயனாளிகளுக்கு ரூபாய் 30 கோடியை முதல்வர் வழங்கினார்.
இதனிடையே 'TNPFCL' சார்பில் கரோனா தடுப்பு, நிவாரண பணிக்கு அமைச்சர் தங்கமணி ரூபாய் 5 கோடி வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் துறைசார்ந்த உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.