Skip to main content

திருவாரூருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி வருகை

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

tn Governors attending central university Seminar

 

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான 2 நாள் கருத்தரங்கு இன்று(2721.2022) தொடங்குகிறது. இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று(27.21.2022) சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருவாரூக்கு செல்கிறார். 

 

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மேயர் அன்பழகன் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இந்த கல்வி நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் சுபாஷ் சார்க்கர், சிக்சா சேன்ஸ்கிரிட் உத்தன் நயாஸின், தேசிய செயலாளர் அதுல் கோத்தாரி, மத்திய ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஆசிர்வாதம் ஆச்சாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

 

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், மற்றும் பதிவாளர் சுலோச்சனா சேகர் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கருத்தரங்கு இன்று(27.5.2022) மற்றும் நாளை(28.5.2022) ஆகிய 2 தினங்களில் நடைபெறுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்