Skip to main content

"அதெப்படி, எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது?" - ஜோதிமணி கேள்வி!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

tn assembly election evm congress mp jothimani mp tweet

 

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று (06/04/2021) நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 07.00 மணியுடன் நிறைவடைந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 71.79% வாக்குப் பதிவாகியுள்ளது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

 

tn assembly election evm congress mp jothimani mp tweet

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். அதெப்படி ஒவ்வொரு முறையும், எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்திரங்களில் எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்