Skip to main content

டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதி மூவர் உயிரிழப்பு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Three passed away in two-wheeler head-on collision

 

இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள கொல்லம்பட்டி அருகே நேற்று இரவு இரண்டு டூவீலரில் வந்த நான்கு பேரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் பாளையம் அருகே உள்ள சீதாம்பட்டியைச் சேர்ந்த ரத்தினம் மற்றும் சேகர், ரெட்டியபட்டியைச் சேர்ந்த சுதாகர் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். 

 

இதில் உடன் வந்த தென்னம்பட்டியைச் சேர்ந்த துரைராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்