Skip to main content

வெடிவிபத்தில் துண்டான மூன்று விரல்கள்- போலீஸ் விசாரணை!

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Three fingers severed in blast - Police investigation

 

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகியமணவாளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மருதை என்பவரின் மகன் சூர்யா. இவர் வீட்டில் மீதம் வைத்திருந்த வெடியை இன்று காலை வெடித்துள்ளார். ஒரு வெடியை கையிலே வைத்து வெடித்த போது எதிர்பாராத விதமாக அவரது மூன்று விரல்கள் வெடித்துச் சிதறி துண்டானது.

 

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் வெடித்தது தீபாவளிக்கு வாங்கிய வெடியா? அல்லது பாறைகளை வெடிக்கப் பயன்படுத்தும் வெடியா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்