புதுச்சேரி என்.சி.சி மாணவர்கள் புதுச்சேரியிலிருந்து கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக நாகப்பட்டினம் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்பும் 'சமுத்திர பெரி' என்ற பெருங்கடல் சாகச பயணத்தை தேங்காய்திட்டு துறைமுகத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சாகச பயணத்தில் 10 பெண்கள் உட்பட 40 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தமுள்ள 456 கி.மீ பயண தூரத்தை 10 நாட்களில் கடந்து செல்ல உள்ளனர். இந்த 10 நாட்களில் என்.சி.சி. மாணவர்கள் கடலோரப் பகுதிகளில் மரகன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர். இன்று தொடங்கும் இந்த பயணமானது வரும் 21 ம் தேதி மீண்டும் புதுச்சேரியை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி,
"நீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக நான் படுத்துவிட்டேன். அதிகாரம் அதனை பற்றி பேசுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் முழுமையாக படியுங்கள்" என்று கூறினார்.