Skip to main content

மறைமுக தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்- திருமாவளவன் பேட்டி

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்க அவசரச்சட்டம் இயற்றிருப்பது தேர்தலுக்கு பிறகு கவுன்சிலர்களை கடத்திச்செல்வதற்கும், குதிரைப்பேரம் நடத்துவதற்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும். இந்த அவசர சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இந்திய அரசு மரபு என்ற பெயரில் கோத்தபய ராஜபக்சேவுக்கு வரவேற்பு கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது.

 

Thirumavalavan press meet


தமிழ் மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். கோத்தபய ராஜபக்சே தனது வருகை குறித்து எண்ண வேண்டும். மதசார்பின்மையை காப்பாற்றுவது இந்திய அரசியலில் கடினமானது என்பதை இந்திய அரசியலில் மகாராஷ்டிரா ஆட்சியமைப்பதில் காட்டுகிறது. ஜனநாயகத்தின் மதசார்பின்மையின் நன்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. மேலவளவு மிக கொடூரமான நாட்டையே உலுக்கிய படுகொலை. மேலவளவு கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்தது ஒட்டுமொத்த தலீத் மக்களுக்கு எதிரான நடவடிக்கை. இது தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும். அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் ஆதிதிராவிட அனைத்து சமுதாய மக்களும் பிரதிநிதியாய் உள்ளதுபோல ஆதிதிராவிட தலித் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும். மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ள நிகழ்வு ஒரு ஆபத்தான அறிகுறி. மதவாத சக்திகளால் மதசார்பின்மையை கட்டுப்படுத்த முடியும் என்பதையே காட்டுகிறது. அதிமுக- விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணி ஏற்பட வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு, காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் பரப்பபடுகிற வதந்தி.

முதலமைச்சரை அதிக முறை சந்தித்து பேசியுள்ளேன். முதல்முறை சந்திக்க வில்லை. மேலவளவு படுகொலை, உள்ளாட்சித்தேர்தலில் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே முதல்வரை சந்தித்தேன். தமிழக பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது.மத்திய அரசே அதற்கே சான்றிதழ் அளித்துள்ளது. இது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

பஞ்சமி நில விவகாரத்தில் பாஜக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, எவ்வளவோ இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர், குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளன. அப்போது எந்தக்கேள்வியும் கேட்காத பாஜகவினர் அரசியல் லாபத்திற்காக பேசுகின்றனர். அரசியல் லாபத்திற்காக இது போன்ற குற்றச்சட்டுக்களை முன்வைக்கின்றனர். மக்களிடம் அவர்கள் அம்பலப்பட்டு நிற்பார்கள் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்