Skip to main content

'கூட்டணிக்கு கமல் வரவேண்டிய அவசியம் இல்லை' - வைகோ பேட்டி!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

 'There is no need for Kamal to come to the alliance' - Vaiko interview

 

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. அதிமுக சார்பிலும், திமுக சார்பிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 'கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம். மத்திய அரசு கார்ப்பரேட் அரசாகவும், மாநில அரசு மத்திய அரசின் கொத்தடிமையாகவும் உள்ளது,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்