Skip to main content

"பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் (16/08/2022) இரவு 07.00 மணிக்கு நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிட கருத்துகளை நிலை நிறுத்துவதற்காகத்தான் தி.மு.க. ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் உடன் தி.மு.க. குறைந்தபட்ச சமரசத்தைக் கூட செய்துக் கொள்ளாது. தேர்தல் வரும், போகும்; ஆனால் இயக்கங்களும், கொள்கைகளும் இருக்கும். 

 

தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த உறவும் கிடையாது; நம்முடையது கொள்கை கூட்டணி, யாரும் பிரிக்க முடியாது. சனாதனவாதிகளால் தமிழக அரசு அதிகப்படியான தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. தி.மு.க.வின் கொள்கைகள் எந்த காலத்திலும் விட்டுத் தர மாட்டோம். பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட கருத்துகளை நிறைவேற்றவே ஆட்சி செய்கிறோம்" எனத் தெரிவித்தார். 

 

இந்த விழாவில் தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்