Skip to main content

தமிழ், சமஸ்கிருதம்... இரு மொழிகளிலும் குடமுழுக்கு... அறநிலையத்துறை பதில்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

தஞ்சை பெரியக்கோவில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என மொழிகளிலும் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையதுறை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

தஞ்சையில் உள்ள பெரியக்கோவிலுக்கு நடத்தப்பட இருக்கும் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. மேலும் வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தது.

 

thanjai periyaovil kudamuluku...

 

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்றே இது தொடர்பான வழக்குகளில் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் குடமுழுக்கு விழாவை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பதிலளிக்கப்பட்டது.

இதனை பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தது.  

 

 

சார்ந்த செய்திகள்