Skip to main content

பொள்ளாச்சி சம்பவம்.. தஞ்சையில் கொந்தளித்த மாணவிகள்..

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

பொள்ளாச்சி சம்பவத்தில் 4 பேர் மட்டுமே குற்றவாளிகள் என அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்ததுடன் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வரக்கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் வெளியே சொன்னது காவல்துறை  இதனால் புகார் கொடுக்கப் போனால் நம் பெயரும் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பல பெண்கள் மறைந்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் செயலில் போலிசார் இறங்கியதாலும் 4 பேர் மட்டுமே சம்மந்தப்பட்டவர்கள் என்று சொன்னதுடன் பார் நாகராஜன் புகார் கொடுத்தவரை தாக்கியது மட்டுமே மற்ற சம்பவத்திற்கு சம்மந்தமில்லை என்று போலிசார் சொன்னதுடன் 4 வீடியோ தான் என்றனர்.

 

protest

 

காவல்துறையின் இந்த அவசரகதி நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் மாணவர்களையும், அரசியல்கட்சிகளையும் போராட்டத்திற்கு இழுத்தது.

 

ஆவேசமடைந்த மக்கள் பார் நாகராஜனின் பாரை அடித்து உடைத்தனர். தலைமறைவான நாகராஜன் தஞ்சையில் ஒரு அதிமுக பிரமுகர் வீட்டில் தஞசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. புதன் கிழமை பார் நாகராஜன் பெண்களை மிரட்டி பணிய வைப்பது போன்ற வீட்யோக்கள் வெளியானது. அதன் பிறகு போராட்டங்கள் அதிகமானது. ஆனால் பார் நாகராஜன் அந்த வீடியோவில் இருப்பது  நான் இல்லை சதீஷ் என்று வீடியோ பதிவை வெளியிட்டுள்ளான்.

 

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். 

இன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பெண்களுக்கு நீதி வேண்டும் பாதுகாப்பு வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்