பயங்கரவாத திட்டங்கள் தமிழக சிறைகளில் இருந்து தான் வகுக்கப்படுகிறது என்று மத்திய மந்திாி பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளாா்.
நாகா்கோவில் ஆயுா்வேத கல்லூாியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூாி வளாகத்தை சுத்தம் படுத்தும் பணியில் தன்னையும் ஈடுபடுத்தி கொண்ட மத்திய மந்திாி பொன் ராதாகிருஷ்ணன் கூறும் போது... தமிழகத்தில் புழால் சிறையில் கைதிகள் வெளியில் இருப்பதை விட சொகுசு வாழ்க்கை வாழுகிறாா்கள். சிறை சாலைகள் கைதிகளுக்கு சொா்க்கபூமியாக மாறிவிட்டது. இந்த மாதிாி ஏற்பாடுகளை செய்து கொடுத்த அதிகாாிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பயங்கரவாத திட்டங்கள் தமிழக சிறைகளில் இருந்து தான் வகுக்கப்படுகிறது என்பது புழால் சிறைதான் உதாரணம். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினாின் உணா்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா்.