Skip to main content

இளம்பெண்ணுக்கு நிர்வாண வீடியோ கால்; குருக்களை புரட்டியெடுத்த கணவன்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

Temple priest video call with young girl

 

இளம்பெண்ணிடம் வீடியோ காலில் அந்தரங்க பாகத்தைக் காட்டிய கோயில் குருக்களை, அவரது கணவர் லெஃப்ட் ரைட் வாங்கும் வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

கோயில் குருக்கள் ஒருவர் முகம் தெரியாத இளம்பெண்ணுக்குத் தவறான நோக்கத்துடன் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, தனக்கு வீடியோ கால் செய்வது தன்னுடைய நண்பர்கள், உறவினர்களாகக் கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த அந்த இளம்பெண், அந்த குருக்களின் காலை எடுத்துள்ளார். அந்த சமயம், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்துவிட்ட கோயில் குருக்கள் அந்தப் பெண்ணிடம் தன்னுடைய மர்ம இடத்தைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.

 

இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீடியோ காலை கட் செய்துவிட்டு சிறிதுநேரம் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணை மேலும் அச்சப்படுத்தும் விதமாக, தன்னுடைய நிர்வாணப் படத்தை அந்தப் பெண்ணின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார் அந்தக் கோயில் குருக்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், இந்த சம்பவம் குறித்து தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார். 

 

இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர் தன் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு அந்தக் கோயில் குருக்களின் போட்டோவை வைத்து அவர் எங்கே இருக்கிறார்? எந்த ஊரில் இருக்கிறார்? என்பதைக் கண்டுபிடித்துள்ளார். அதன்பிறகு, அந்தக் கோயில் குருக்களை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, அவர் செய்த தவற்றை அவர் வாயாலேயே வரவழைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்