சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, "இன்றிரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு ஒளியேற்றும் நிகழ்வு முடிந்த பின்னர் யாரும் பயப்பட வேண்டாம். மருத்துவமனைகளில் மின் விளக்குகள் அணைக்கப்படும். மின் விளக்குகளை அணைத்து விட்டு 09.10 க்கு வோல்டேஜ் அதிகமாகி பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் சாதனங்களுக்கு பழுது ஏற்பட்டு விடுமோ என மக்கள் அச்சப்பட தேவையில்லை. விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழக்கம்போல் வழங்கப்படும். இரவு 09.00 மணிக்கு மின்விளக்குகளை மக்கள் அணைத்தாலும் மற்ற மின்சாதனங்களை இயக்கலாம். 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைப்பதால் 1,200 மெகாவாட் மின்சார பயன்பாடு குறையும்.
16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை என்றிருந்த நிலையில் தொழிற்சாலைகள் இயங்காததால் 5 ஆயிரம் மெகாவாட் தேவை குறைந்துள்ளது. டாஸ்மாக் கடை மூடல் காரணமாக ஒரு நாளைக்கு ரூபாய் 80 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.