Skip to main content

ரயில் நிலையத்தில் வழிப்பறி: திருநங்கைகள் கைது!

Published on 15/06/2018 | Edited on 15/06/2018
train


சென்னையை அடுத்த வண்டலூர் ரயில் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று திருநங்கைகள் உள்பட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூா் ரயில் நிலையத்தில் சந்தோஷ் குமார் என்பவரை கத்தியால் வெட்டி, தங்க செயின், செல்போன், வாட்ச், பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

ரயில்வே போலீசார் தனிப்படை கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் 3 திருநங்கைகள் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவா்களில் ஒருவா் 16 வயது சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்கள் திண்டிவனத்தை சோ்ந்த மதன் குருமூா்த்தி-27 என்பவா் தலைமையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவா்களிடமிருந்து சந்தோஷ்குமாரிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகை, செல்போன், வாட்ச் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவா்களை மேல்நடவடிக்கைக்காக ரயில்வே பாதுகாப்பு தனிப்படை மேல்நடவடிக்கைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூா் ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா்.

இவா்கள் கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் உட்பட பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளதால், காஞ்சி மாவட்ட போலீசும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்