Skip to main content

பள்ளிக்கல்வி ஆணையர் நாளை ஆலோசனை!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

 

tamilnadu schools commissioner discussion students


மாணவர் சேர்க்கை, மதிப்பெண் சான்று உள்ளிட்டவைப் பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் நாளை (16/06/2021) ஆலோசனை நடத்துகிறார். காணொளி மூலம் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர். 

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், பாடப் புத்தகங்கள் விநியோகம் உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் கூறுகின்றன. 

 

இதனிடையே, "எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தக்கூடாது. மாணவர் சேர்க்கையின் போது எந்த படிவத்திற்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாற்றுச்சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கும் போது எந்த புகார்களுக்கும் இடமின்றிச் செயல்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது" என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்