Skip to main content

'உயிரிழப்புகளை குறைத்து காட்டுவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்' - பாஜக எல். முருகன்

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

'Tamil Nadu government should avoid underestimating casualties' - BJP L Murugan

 

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. சில நாட்களுக்கு முன்புவரை கரோனா ஒருநாள் தொற்று எண்ணிக்கை 37 ஆயிரம் என்று இருந்த நிலையில், தற்போது 17 ஆயிரத்திற்கும் கீழ் ஒருநாள் தொற்று உறுதிசெய்யப்பட்டுவருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது.

 

இந்நிலையில், உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். ஐ.சி.எம்.ஆர் விதிமுறைகளின்படி இணைநோயால் உயிரிழந்தவர்களைக் கரோனாவால் உயிரிழந்ததாக கருத வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு கரோனா  உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்