Skip to main content

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை 

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

Tamil Nadu cabinet meets today!

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (27/06/2022) கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம். 

 

சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (27/06/2022) மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, புதிய தொழில்களுக்கு அனுமதி அளிப்பது, மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளது. 

 

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்தும், அமைச்சரவையில் விவாதிக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது. முக்கிய கொள்கை முடிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுமென அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்