Skip to main content

தேசிய கொடியை அவமதித்து முகநூலில் பதிவிட்டதாக தமிழர் கழகம் மாவட்ட செயலாளர் கைது..

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

manikandan

 

 

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை அவமதித்து முகநூலில் பதிவிட்டதாக தமிழர் கழகம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் .மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

புதுக்கோட்டை காமராஜர்புரம் 5-ம் வீதியை சேர்ந்தவர் அண்ணாமலை இவரது மகன் மணிகண்டன் (48). பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழர் கழகம் அமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ளார். மக்கள் பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். நிலாச்சோறு என்ற பெயரில் பாரம்பரிய உணவகமும் நடத்தி வருகிறார். 

 

இவர் மீது புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் தேசிய கொடியை அவமதித்து அ.மணிகண்டன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாக கூறி, தேசிய கொடியை  அவமதிப்பதாகவும்  நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிப்பதுமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்