Skip to main content

திருடு போன செல்போன்! டென்சனில் அமைச்சர்!

Published on 19/02/2018 | Edited on 19/02/2018
sellurraj

 

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் இன்று 19.2.18 ந்தேதி மதியம் புதிய கூட்டுறவு வங்கி கிளை திறக்கப்பட்டது. அந்த நிகழ்வுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேடையில் அமர்ந்திருந்த செல்லூர் ராஜீ தனது கைபேசியை ஆசனத்தில் வைத்துவிட்டு எழுந்து மேடைக்கு வந்து பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கிக்கொண்டு இருந்தார். அது முடிந்தபின் தனது கைபேசியை தேட, அது காணாமல் போயிருப்பது தெரிந்து அதிர்ச்சியானார்.

 

இதைப்பற்றி தன் அருகில் இருந்த கலெக்டர் கந்தசாமி, சேவூர்.ராமச்சந்திரனிடம் கூற அதிர்ச்சியாகிவிட்டனர். மேடையில் அமர்ந்திருந்த அனைவரிடமும் அமைச்சரின் செல்போன் பற்றி விசாரித்தனர். 

 

அரசு விழாவில் அமைச்சர்  செல்லுர் ராஜீ செல்போன் திருடு போனது பற்றி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை அவரின் செல்போன் கிடைக்கவில்லை. இதனால் டென்ஷனில் உள்ளார் அமைச்சர்.
 

சார்ந்த செய்திகள்