Skip to main content

விருத்தாச்சலத்தில் பன்றிக் காய்ச்சலால் பெண் ஒருவர் உயிரிழப்பு! 

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
vdm



கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள எம்.ஆர்.கே. நகரில் வசிப்பவர் முத்துசாமி (52). இவரது மனைவி ராணி (47). ராணி கடந்த இரண்டு வாரங்களாக இருமல் சளி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளார். 
 

இதனால் இவரை திட்டக்குடி, பெரம்பலூர் உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் உடலில் எவ்வித முன்னேற்றமும் அடையாமல் இருந்ததால் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் திருச்சி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த போது பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. 
 

இந்நிலையில் வியாழக்கிழமை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பின் விருத்தாச்சலம் அவரது வீட்டிற்கு  கொண்டு வந்து தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்