Skip to main content

தொடரும் புளூவேல் கேம் தற்கொலைகள்..! டி.ஜி.பி. மாவட்ட எஸ்.பிகளுக்கு எச்சரிக்கை..!

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
தொடரும் புளூவேல் கேம் தற்கொலைகள்..!
டி.ஜி.பி. மாவட்ட எஸ்.பிகளுக்கு எச்சரிக்கை..!

கடந்த சில வாரங்கலாக தொடரும் புளூ வேல் ஆன் லைன் விளையாட்டால் தொடர்ந்த தற்கொலை தற்போது தமிழகத்தில் மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டார், அதே போல சென்னையை மதுரவாயிலை  சேர்ந்த நிவேதா என்ற மாணவி இந்த விளையாட்டால் தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து குதித்தபோது அதிசயமாக உயிர்பிழைத்தார். தற்போது வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

இதனை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் அனைத்து மாவட்ட எஸ்.பிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் உயிர்குடிக்கும் ஆன்லைன் விளையாட்டால் தொடரும் தற்கொலைகளை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில் பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்..! இந்த விளையாட்டை சைபர் க்ரைம் போலீஸ்சாரால் கூட தடுக்க முடியாத சூழலால் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

- அரவிந்த்

சார்ந்த செய்திகள்