Skip to main content

பார்க்க விரும்பல... போக சொல்லு... கழட்டிவிட்ட காதலி வீட்டு முன்பு வாலிபர் தற்கொலை

Published on 31/07/2018 | Edited on 31/07/2018


 

Suicide


பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு, திடீரென கள்ளக்காதலி கழட்டிவிட்டதால் அவரது வீட்டு முன்பு வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

 

சென்னை அருகே திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் முருகன். 35 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து அதே பகுதியில் குடியிருந்து வந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நட்பு காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

 

 

 

இவர்களின் கூடா நட்பு விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து, அப்பெண்ணின் வீட்டார் அவரை நாகர் கோவிலுக்கே அழைத்துச் சென்றுவிட்டனர். அப்பெண்ணை பார்க்க முடியாமல் தவித்து வந்த முருகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு சென்றார். அங்கு அப்பெண் இருக்கும் வீட்டை கண்டுபிடித்து அவருடன் பேச முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண் முருகனை பார்க்க விரும்பவில்லை. 

 

 

 

தொடர்ந்து முயற்சி செய்தும் பேச முடியாமல் தவித்தார் முருகன். அவரை பார்க்க விரும்பல, இங்கிருந்து போக சொல்லுங்க என்று உறவினர்களிடம் கூறி முருகனிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த முருகன், அப்பெண்ணின் வீட்டின் முன்பே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை ஆசாரிபள்றளம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிசிக்கை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 



 

சார்ந்த செய்திகள்