Skip to main content

விடுதலைக்கு தயாராகும் சுதாகரன்...

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

Sudhakaran preparing for release ...

 

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருடம் சிறைத் தண்டனை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.

 

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சுதாகரன் நாளை மறுநாள் (16.10.2021) விடுதலையாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக விடுவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியிருந்தனர். அபராதம் செலுத்தாததால் சுதாகரன் மட்டும் கூடுதலாக ஒரு வருடம் சிறையிலிருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்வரை சிறையிலிருக்க வேண்டிய சுதாகரன், 89 நாட்களுக்கு முன்னதாகவே நாளை மறுநாள் விடுதலையாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

 

udanpirape

 

சார்ந்த செய்திகள்