Skip to main content

ஆசிரியர்களின் ஆசியோடு தேர்வெழுத தயாரான மாணவிகள்..! (படங்கள்)

Published on 02/03/2020 | Edited on 02/03/2020


 

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் காலை 10.00 மணிக்கு தொடங்கியது, மதியம் 01.15 மணி வரை நடைபெறும் தேர்வில் மாணவர்கள் முதல் 10 நிமிடம் வினாத்தாள் வாசிக்கவும், அடுத்த 5 நிமிடம் ஹால்டிக்கெட் சுயவிவரத்தை சரிபார்க்கவும் நேரமாகவும் தரப்பட்டுள்ளது. 
 

தமிழகத்தில் 4.41 லட்சம் மாணவிகள், 3.74 லட்சம் மாணவர்கள் என 8.16 லட்சம் பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 19,166 சேர்த்து மொத்தம் 8,35,525 பேர் 3,012 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.  
 

குறிப்பாக சென்னையில் 410 பள்ளிகளிலிருந்து 160 மையங்களில் மொத்தம் 47,234 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதேபோல் புதுச்சேரியில் 149 பள்ளிகளிலிருந்து 40 மையங்களில் 14,958 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மயிலாப்பூர் பகுதியில் உள்ள லேடி சிவசுவாமி பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுத வந்த மாணவிகள் அவர்களின் ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் ஆசிபெற்று தேர்வு அறைகளுக்கு சென்றனர். 


பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக சுமார் 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24- ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்