Skip to main content

சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவி... அமைச்சர் நேரில் பாராட்டு! (படங்கள்) 

Published on 26/12/2021 | Edited on 26/12/2021

 

தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று (25/12/2021) ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பி.காசிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஸ்வேகா, உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மைக்ரோ பயோலஜி (Micro Biology) (மேற்படிப்பு செலவு ரூபாய் 3 கோடி) மேற்படிப்பிற்கு கட்டணமின்றிப் பயில்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவியைப் பாராட்டி நல்ல முறையில் கல்வி பயின்று நமது மாவட்டத்திற்கும் நமது மாநிலத்திற்கு மற்றும் நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர். 

 

சார்ந்த செய்திகள்