Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
ச்

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.   தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.   

மேலும்,  ஸ்டெர்லைட் ஆலையில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை  உடனே தமிழக அரசு தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

 

மூன்று வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான புதிய வழிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடியில் கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.   இதையடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.   இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது ஏற்புடையது அல்ல என்று தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்து  மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். 

 

சார்ந்த செய்திகள்